
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வருபவர்எஸ்.ஏ.போப்டே. இவரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்துகடந்த வாரம், அடுத்த நீதிபதியைப் பரிந்துரைக்குமாறு மத்திய அரசு,எஸ்.ஏ.போப்டேவிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்.ஏ.போப்டே, அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா என்பவரைபரிந்துரைத்துள்ளார்.
இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால், அடுத்த ஒரு வருடம்நான்கு மாதங்களுக்கு (ஆகஸ்ட் 26,2022 வரை) உச்ச நீதிமன்றதலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவி வகிப்பார். தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளிலேயே எஸ்.ஏ.போப்டேவிற்கு பிறகு மூத்தவரான என்.வி ரமணா, ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள்வரும்’ என்பது போன்ற சிறப்புமிக்க தீர்ப்புகளை அளித்த நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)