மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.
125 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா ஆனது தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று முன்தினம் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் 105 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.