Advertisment

கேரளாவில் 'பந்த்' பிசு பிசுத்தது!

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதவை எதிர்த்து போராட்டங்கள் வலுக்கின்றன.டெல்லி, மேற்குவங்கம், அசாம், திரிபுரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக எல்லைப் பகுதியான முர்ஷிதாபாத் மாவட்டத்திலும் பரவிய நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் கண்டன பேரணியும் நடந்தது.

Advertisment

citizenship amendment bill 2019 kerala oppose parties bandh announced

இதனிடையே கேரளாவிலும் இந்த மசோதவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது. முதல்வர் பினராய் விஜயன் மாநில காங்கிரசின் தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பெரிய அளவில் பேரணியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் தமிழக அரசுப் பேருந்து ஒன்று பாலக்காடு பகுதியில் கல்வீச்சுக்கு இலக்கானதில் கண்ணாடி நொறுக்கப்பட்டது. தவிர மாநிலத்தின் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து இன்று (17.12.2019) பந்த்திற்கான அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பந்த் முறையாக அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. எனவே ஆதரவு இல்லை என முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்ததால் பிரதான கட்சிகளின் ஆதரவின்றி பந்த் பிசு பிசுத்தது. மாநிலத்தில் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisment

banth announced citizenship amendment bill issues Kerala oppose parties peoples strike
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe