Skip to main content

கேரளாவில் 'பந்த்' பிசு பிசுத்தது!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதவை எதிர்த்து போராட்டங்கள் வலுக்கின்றன. டெல்லி, மேற்குவங்கம், அசாம், திரிபுரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக எல்லைப் பகுதியான முர்ஷிதாபாத் மாவட்டத்திலும் பரவிய நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் கண்டன பேரணியும் நடந்தது.

citizenship amendment bill 2019 kerala oppose parties bandh announced


இதனிடையே கேரளாவிலும் இந்த மசோதவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது. முதல்வர் பினராய் விஜயன் மாநில காங்கிரசின் தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பெரிய அளவில் பேரணியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் தமிழக அரசுப் பேருந்து ஒன்று பாலக்காடு பகுதியில் கல்வீச்சுக்கு இலக்கானதில் கண்ணாடி நொறுக்கப்பட்டது. தவிர மாநிலத்தின் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து இன்று (17.12.2019) பந்த்திற்கான அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பந்த் முறையாக அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. எனவே ஆதரவு இல்லை என முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்ததால் பிரதான கட்சிகளின் ஆதரவின்றி பந்த் பிசு பிசுத்தது. மாநிலத்தில் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Brain-Eating Amoeba Guidelines Released

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில், “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவிற்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. 

Next Story

பற்றி எரிந்த டீக்கடை; சிட்டாய்த் தப்பிய ஊழியர்கள்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
About burnt tea shop; Chitai escaped employees

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒட்டுமொத்த டீக்கடையும் கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள முதலக்குளம் பகுதியின் முக்கிய சாலை பகுதியிலேயே உள்ள டீக்கடை ஒன்றில் கடையின் உரிமையாளர் வழக்கம்போல இன்று கடையைத் திறந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கடையில் தீப்பற்றியதோடு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் டீ குடிக்க வந்தவர்கள் என அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி வெளியே ஓடி வந்தனர். தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.