நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் இது வரை 16 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment

citizenship amendment bill 2019 delhi congress party sonia gandhi, rahul gandhi

இதனிடையே டெல்லி ராஜ்காட்டில் நாளை (22.12.2019) மதியம் 02.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெறும் தர்ணா போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் இடைக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.