குடியுரிமை திருத்த சட்டம் அமல் படுத்தப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகளும் வலுவாக இந்த சட்டத்தையும் எதிர்த்து வருகின்றன. இந்தியா முழுவதும் பல மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். வடகிழக்கு இந்தியாவில் போராட்டங்களும், ஒருசில இடங்களில் வன்முறைகளும் நடந்தன.
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் சிஏஏவுக்கு எதிராக மாணவர்கள் போராடியதால், ஒருசில அமைப்புகள் மாணவர்களை தாக்கியுள்ளனர். இதுபோல அங்கு அங்கு வன்முறைகள் நிகழ்கின்றன.
இந்நிலையில், “இதுபோன்ற போராட்டங்களில் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்” என்று திட்டவட்டமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.