/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ddcc.jpg)
இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சல்மான்கான், தனது பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல சில தினங்களுக்கு முன்புமும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் சல்மான்கானை சோதனை செய்வதற்காக நிறுத்தினார். இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலானது.
சிஐஎஸ்எப் வீரரின்இந்த செயல் சமூகவலைத்தளங்களில்பெரும் பாராட்டை பெற்றது. இந்தநிலையில்சல்மான்கானை நிறுத்திய சிஐஎஸ்எப் வீரர், அதை பற்றி ஊடகங்களிடம் பேசிவிடக்கூடாதுஎன்பதற்காக, அவரின்தொலைபேசி உயர் அதிகாரிகளால் பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில்இந்த சர்ச்சைக்குசிஐஎஸ்எப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சல்மான்கானை நிறுத்தியவீரருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அவரைபாராட்டி தக்க பரிசளிக்கப்பட்டதாகவும்சிஐஎஸ்எப்கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)