Skip to main content

இந்தியாவில்  சிகரெட் மற்றும் டொபாகோ கடத்தல் அதிகரிப்பு!!!

Published on 28/03/2018 | Edited on 28/03/2018
cigarette tobacco

 

இந்தியாவில் 2014-2015 ஆம் ஆண்டை விட 2016- 2017 ஆம் ஆண்டு காலங்களில்  சிகரெட் மற்றும் டொபாகோவை கடத்துவது 136 மடங்காக அதிகரித்துள்ளது.கடத்தல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும்  எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  சிகரெட் மற்றும் டொபாகோ கடத்தல் 2014 -2015 ஆம் ஆண்டுகளில் 1,312ஆக இருந்த வழக்கு.2016-2017ஆம் ஆண்டுகளில் 3,108 வழக்குகளாக அதிகரித்துள்ளது. எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் இதுகுறித்து தெரிவித்துள்ளது என்னவென்றால்.நாங்கள்  இவர்களையெல்லாம் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.இருந்தாலும் நாங்கள் கைப்பற்றுவது பனிக்கட்டியில் நுனிப்பகுதியை மட்டும்தான் ஆனால் இதை விட மிகப்பெரிய சட்டவிரோத கடத்தல்கள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .நாட்டின் வருவாய் இழப்பீடு என்பது புகையிலை பொருட்கள், மொபைல் போன்கள், மதுபானம் ஆகியவற்றின் சட்டவிரோத வர்த்தகத்தால்தான் ஏற்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ஏழு உற்பத்தி துறைகளில் சட்டவிரோதமான வர்த்தகம் நடந்ததால் நாட்டிற்கு சுமார் 39,239ஆயிரம் கோடி வருவாய்நஷ்டமடைந்துள்ளது. சட்டவிரோதமாக வர்த்தகம் நடந்ததில் டொபாக்கோவின்னால் 9,139கோடியும்,மொபைல் போன்களினால் 6,139கோடியும் மற்றும் மதுபானத்தினால் 6,309 கோடியும் அரசிற்கு நஷ்டமாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையும்,சட்ட விரோத வர்த்தகமும் இந்தியாவில் வளர்ந்துகொண்டே வருகிறது இதனை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் கூறியது 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

சினிமா பட பாணியில் சேஸிங்; 605 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police seized tobacco worth 605 kg near Vellore

வேலூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை, குடியாத்தம், பொன்னை சேர்க்காடு உள்ளிட்ட மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் மாநில எல்லைப் பகுதியான  கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் நேற்றிரவு வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர்.

கார் நிற்போதுபோல் போக்கு காட்டிவிட்டு நிற்காமல் சென்றதால், உடனடியாக தங்களது வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்றனர். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பள்ளிக்குப்பம் அருகே மடக்கி பிடித்தனர். கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

போலீசார் காரில் சோதனை மேற்கொண்டபோது அதில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 3,80,000 மதிப்புள்ள 605 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குட்கா பொருட்கள் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கார் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார் என ஆய்வு செய்தபோது அது, போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனம் எனத் தெரியவந்ததை அடுத்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பட பாணியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று காட்பாடி போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.