/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cigratte.jpg)
இந்தியாவில் 2014-2015 ஆம் ஆண்டை விட 2016- 2017 ஆம் ஆண்டு காலங்களில்சிகரெட் மற்றும் டொபாகோவைகடத்துவது136 மடங்காகஅதிகரித்துள்ளது.கடத்தல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும்எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில்சிகரெட் மற்றும் டொபாகோ கடத்தல் 2014 -2015 ஆம் ஆண்டுகளில் 1,312ஆக இருந்த வழக்கு.2016-2017ஆம் ஆண்டுகளில் 3,108 வழக்குகளாக அதிகரித்துள்ளது.எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் இதுகுறித்து தெரிவித்துள்ளது என்னவென்றால்.நாங்கள் இவர்களையெல்லாம் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம்கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.இருந்தாலும் நாங்கள் கைப்பற்றுவது பனிக்கட்டியில் நுனிப்பகுதியை மட்டும்தான் ஆனால் இதை விட மிகப்பெரிய சட்டவிரோத கடத்தல்கள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.நாட்டின் வருவாய் இழப்பீடு என்பதுபுகையிலை பொருட்கள், மொபைல் போன்கள், மதுபானம் ஆகியவற்றின் சட்டவிரோத வர்த்தகத்தால்தான்ஏற்படுகிறது.
2014 ஆம் ஆண்டு ஏழு உற்பத்தி துறைகளில் சட்டவிரோதமான வர்த்தகம் நடந்ததால் நாட்டிற்கு சுமார் 39,239ஆயிரம் கோடி வருவாய்நஷ்டமடைந்துள்ளது. சட்டவிரோதமாக வர்த்தகம் நடந்ததில் டொபாக்கோவின்னால் 9,139கோடியும்,மொபைல் போன்களினால் 6,139கோடியும் மற்றும் மதுபானத்தினால் 6,309 கோடியும் அரசிற்கு நஷ்டமாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையும்,சட்ட விரோத வர்த்தகமும் இந்தியாவில் வளர்ந்துகொண்டே வருகிறது இதனை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக உள்ளதுஎஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் கூறியது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)