
இந்தியா - பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் வடமேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் நாடுகளே பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே தொடர்ந்து எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் தற்போது வரை பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில் வரும் நாட்களில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு நாட்டின் எல்லையில் என்ன நடந்தாலும் சூழலைச் சமாளிக்கக் கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.