Chops Into 32 Pieces Dumps Them In Borewell karnataka father tragedy

தந்தையைக் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் பரஸ்ராம் குழலி. பரஸ்ராம் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது 20 வயது மகன் விதல்லாவைதொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். பரஸ்ராமின் மனைவி சரஸ்வதி மற்றும் அவரது மூத்த மகன் தனியாக வசித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கம் போல் பரஸ்ராம் மது அருந்திவிட்டு வந்து தனது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் விதல்லா இரும்பு ராடால் அவரது தந்தையான பரஸ்ராமை அடித்தே கொன்றுள்ளார்.

இதன்பின் தந்தையின் உடலை 32 துண்டுகளாக வெட்டி அவரது வயலில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் போட்டுள்ளார். இருந்தும் அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததைத்தொடர்ந்து அக்கம்பக்க வயல்களுக்கு வருவோர் காவல்துறையினருக்குப்புகார் அளித்தனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், விதல்லாகொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன்பின் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உடல் பாகங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடல் பாகங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.