Advertisment

கமல்ஹாசனுக்கு விருந்தளித்த சிரஞ்சீவி!

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த படம் வசூலில் உலகம் முழுவதும் ரூ.270 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்விக்ரம் திரைப்படத்தின் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் கமல்ஹாசன் மற்றும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து அவரது வீட்டில் விருந்தளித்துப் பாராட்டினார். இந்த விருந்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கானும் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Salman Khan chiranjeevi kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe