பீகார் தேர்தல் பரபரப்பு... இணையத்தில் கசிந்த சிராக் பஸ்வானின் வீடியோவால் சர்ச்சை...

chirag paswan video went viral

பீகார் தேர்தலுக்கு மத்தியில், இறந்த ராம்விலாஸ் பாஸ்வானுக்கு துக்கம் அனுசரிக்க அவரது மகன் சிராக் பஸ்வான் ஒத்திகை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த எட்டாம் தேதி காலமானார். இந்நிலையில், இறந்த ராம்விலாஸ் பாஸ்வானுக்கு துக்கம் அனுசரிக்க அவரது மகன் சிராக் பஸ்வான் ஒத்திகை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன் நின்றுகொண்டுசிராக் பாஸ்வான் அங்கிருப்பவர்களிடம் கிண்டலாகப் பேசுவதும், வீடியோவை எங்கு கட் செய்ய வேண்டும், எங்கு எடிட் செய்ய வேண்டும், சிகை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், எதனை கேமராக்களில் வீடியோ எடுக்கப்படுகிறது உள்ளியிட்டவை குறித்து பேசுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தந்தை இறப்பை வைத்து சிராக் அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Bihar Chirag Paswan
இதையும் படியுங்கள்
Subscribe