Advertisment

சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளால் கடைகளில் குவிந்த மக்கள்

chips pocket money in karnataka people and children are  happy 

சிப்ஸ் போன்ற தின்பண்டங்களைஎப்போதும் குழந்தைகள்மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால், கர்நாடகாவில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை கூட்டம் கூட்டமாக வாங்கிச் செல்கின்றனர்.

Advertisment

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள உண்ணூர் கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக அங்குள்ள கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில்500 ரூபாய்நோட்டுகள் உள்ளதாகப் பரவிய தகவலால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை போட்டிப் போட்டு சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடைகளில் உள்ள சிப்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தும்விற்றுத்தீர்ந்து உள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெயரில்விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில்500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அக்கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும்தங்களுக்கு சுமார் முப்பதாயிரம்ரூபாய் வரை கிடைத்துள்ளதாகத்தெரிவித்தனர்.

Advertisment

மீண்டும் அதே நிறுவனங்கள்பெயரில் கடைகளில் விற்பனைக்குவந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் பணம் ஏதும் இல்லாததால் மக்கள்ஏமாற்றம் அடைந்தனர். இச்செயலானது, சிப்ஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பிரபலமாக்குவதற்கு இதுபோன்றுசெய்துள்ளதாகவும், சிப்ஸ் பாக்கெட்டுகளில்இருந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானநோட்டுகள்தானா என்ற சந்தேகம் தங்களுக்குஇருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIRAL karnadaka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe