Advertisment

நாளை முதல் பழைய ஏ.டி.எம் கார்டுகள் செல்லாது...

sdfz

Advertisment

அனைத்து வங்கிகளும் மேக்னடிக்-ஸ்ட்ரிப் ஏடிஎம் கார்டுகளை இ.எம்.வி சிப் கார்டுகளாக டிசம்பர் 31, 2018 தேதிக்குள் மாற்றும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதன்படி ஏடிஎம் கார்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாளை முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மேக்னடிக் கார்டுகளில் முன்புறம் சிப் இல்லாமல் கறுப்பு நிற மேக்னடிக் ஸ்ட்ரிப் மட்டும் ஒட்டப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கார்டுகள் தான் தற்பொழுது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வகை கார்டுகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிகள் மூலம் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கார்டில் சிப் பொருத்தப்பட்டிருந்தால் அதனை மாற்றத்தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SBI new EMV debit and credit card ATM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe