Skip to main content

இந்தியாவிற்குள் நுழைந்து சிறுவனைக் கடத்திச் சென்ற சீன இராணுவம் - பாஜக எம்.பி அதிர்ச்சி தகவல்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

china

 

சீனா, இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் கிராமங்களை உருவாக்கி வருவதுடன், லடாக்கில் பாலம் ஒன்றையும் கட்டி வருகிறது. சீனா, கிராமங்களை உருவாக்கியுள்ள பகுதிகளும், தற்போது பாலம் கட்டி வரும் பகுதியும் நீண்டகாலமாகவே அந்தநாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்துவருவதாக இந்திய அரசு கூறி வருகிறது. அதேபோல் அருணாச்சல மாநிலத்தின் பகுதிகளுக்கு அண்மையில், சீன மொழிப்பெயர்களைச் சூட்டியது.

 

இதற்கிடையே சீன இராணுவத்தினர், இந்தியாவிற்குச் சொந்தமான பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும், நுழைய முயற்சிப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவிற்குச் சொந்தமான பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்திலிருந்து  மிராம் டாரோன் என்ற 17 வயது சிறுவனைச் சீனா இராணுவம் கடத்திச் சென்றுவிட்டதாக, அம்மாநிலத்தின் பாஜக எம்.பியான தபீர் காவ் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சிறுவன் கடத்திச் செல்லப்பட்ட லுங்டா ஜோர் பகுதியில், சீனா கடந்த 2018ஆம் ஆண்டு 3.4 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்ததாகவும் தபீர் காவ் குறிப்பிட்டுள்ளார். சீன இராணுவம் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து சிறுவனைக் கடத்திச் சென்றதாக பாஜக எம்.பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தைவான் அதிபரின் வாழ்த்துக்குப் பதிலளித்த மோடி; எதிர்க்கும் சீனா!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Opposing China for Modi responded to Taiwan President's greeting

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். 

மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தைவான் அதிபர் லாய் சிங்-டே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தல் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். 

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்கள் அன்பான வாழ்த்து செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது, நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்.’ என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பதிலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “தைவான் பிராந்திய அதிகாரிகள் மற்றும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது. உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. ‘ஒரே சீனா கொள்கை’ தொடர்பாக, இந்தியா தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளை செய்துள்ளது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

 “அருணாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி” - பிரதமர் மோடி

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
PM Modi said Thank to the people of Arunachal Pradesh

நாடாளுமன்றத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. 

60 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தன. 60 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஏற்கெனவே முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற 10 தொகுதிகளையும் சேர்த்து 42 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் கிட்டத்தட்ட பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நன்றி அருணாச்சல பிரதேசம். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். தங்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததற்காக அருணாச்சலப் பிரதேச மாநில பா.ஜ.கவுக்கு என் நன்றிகள் மீண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும். அருணாச்சலப் பிரதேச மாநில பா.ஜ.கவினர் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் இணைந்த விதம் பாராட்டுக்குரியது’ எனத் தெரிவித்துள்ளார்.