Advertisment

பின்வாங்கிய சீன ராணுவம்... கூடாரங்கள், வாகனங்கள் நகர்த்தப்பட்டன...

Chinese Army has moved back tents, vehicles by 2 km

Advertisment

இந்திய எல்லைப்பகுதியில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் இரண்டு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு பின்வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய, சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் இருநாட்டு ராணுவமும் ஒப்பந்தத்தை மதித்துச் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும், இருநாட்டு ராணுவத்தினரும் எல்லைப்பகுதியை ஒட்டி கூடாரங்கள் அமைத்துத் தங்கி வந்தனர். இந்நிலையில் எல்லைப்பகுதியில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் இரண்டு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு பின்வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கூடாரங்கள், வாகனங்கள் மற்றும் வீரர்கள் எல்லைப்பகுதியில் இருந்து நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

china LADAK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe