இந்தியர்கள் எங்கள் நாட்டுக்குள் வரலாம்... ஆனால் இது அவசியம்! - சீனாவின் புது நிபந்தனை!

india china

உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவைரஸ் முதன்முதலாக சீனாவில் இருந்து பரவியது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், தங்கள் நாட்டில் வைரஸைகட்டுப்படுத்தியசீனா, உலகிலிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியது. வெளிநாட்டினர் சீனாவிற்கு வர பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்குள்வர சீனா தடை விதித்தது. இந்தியாவில் கரோனாதாக்கத்தை முன்னிட்டு இந்தத்தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்குள்வர, சீனா நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. தொழில் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் இருந்துசீனா செல்ல விரும்புவர்களுக்கும், சீனா குடிமக்களின் உறவினர்களுக்கும் விசா நடைமுறைகளைதொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளதுஇந்தியாவிலுள்ள சீனத்தூதரகம். அந்த நிபந்தனை,சீனாவிற்குள்வரும் ஒருவர்சீனாவின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கவேண்டும் என்பதுதான். ஆனால் இந்தியாவில் சீன தடுப்பூசி பயன்பாட்டில் இல்லை. இதனால் இந்த நிபந்தனையை நிறைவேற்றி இந்தியர்களால் சீனா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிப்பவர்கள். ஆனால், தற்போது சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

china coronavirus vaccine India
இதையும் படியுங்கள்
Subscribe