Advertisment

323 இந்தியர்களுடன் டெல்லி வந்தது 2- ஆவது விமானம்!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 14,000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

china coronavirus 323 passengers air india flight arrive delhi airport

இந்நிலையில் சீனாவில் இருந்து 323 இந்தியர்களுடன் டெல்லி வந்தது இரண்டாவது விமானம். இந்த விமானத்தில் வுஹானில் சிக்கித் தவித்த மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அதேபோல் கல்வி, பணி நிமித்தம் சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 29 பேர் ஒரேநாளில் சொந்த ஊர் திரும்பினர். கடந்த நான்கு நாட்களில் 46 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளா மாநிலத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

Air india china corona virus india passengers
இதையும் படியுங்கள்
Subscribe