/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kejriwal.jpg)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது இளைஞர் ஒருவர் மிளகாய் பொடியை தூவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தலைமை செயலகத்தில் மதிய உணவு இடைவேளைக்காக தனது அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொடி வீசியவர் பெயர் அணில் ஷர்மா என்று தெரிய வந்துள்ளது. இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, அவரது காலில் விழுந்துள்ளார். அதை கெஜ்ரிவால் தடுக்கும்போது, திடீரென அந்த இளைஞர் குட்கா பாக்கெட்டில் கொண்டுவந்த மிளகாய் பொடியை அரவிந்த் கெஜ்ரிவால் முகத்தில் வீசியுள்ளார். பின்னர், அவரை காவல்துறையினர் பிடித்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, ”டெல்லியில் காவல்துறை மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கிறது. டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்காமல் இருக்கிறார்கள்” என்று ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த சம்பவத்தை போல ஏற்கனவே பலமுறை அரவிந்த் கெஜ்ரிவால் தனிநபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)