Advertisment

குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! 

குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisment

Child

பீகார் மாநிலம் முஷாப்பர்பூர் பகுதியில் உள்ளது சாஹூ சாலை அருகே உள்ளது குழந்தைகள் காப்பகம். இந்த காப்பகத்தை சேவா சங்கல்ப் ஏவம் விகாஸ் அமிதி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாகவும், பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதாகவும் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது டாட்டா சமூக அறிவியல் நிறுவனம்.

இந்த அறிக்கை கூடிய விரைவில் பரபரப்பை ஏற்படுத்த, முஷாப்பர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளித்தது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட அமைப்பின் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. தற்போது காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் பீகாரில் உள்ள மதுபானி குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Bihar Child abuse sexual harassment
இதையும் படியுங்கள்
Subscribe