
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ளது குரவிலங்காடு எனும் பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் அலல்-சுருதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ரூத் மரியம் அலல் என்ற குழந்தை உள்ளது. நேற்று குழந்தை ரூத் மரியம், ஒளிந்து விளையாடுவதற்காக வீட்டில் உள்ள பிரிட்ஜ்க்கு பின் பக்கம் சென்றுள்ளது. அப்போது பிரிட்ஜில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தையை தூக்கி வீசியது. படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது.
Follow Us