Advertisment

தொடர்ந்து வரும் குழந்தை கடத்தல் வதந்தி; கடும் நடவடிக்கை வேண்டும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Advertisment

child

Advertisment

தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து குழந்தை கடத்தவந்ததாக பல நபர்கள் தாக்கப்பட்டு உயிரிழிந்த சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோரையும், தவறான செய்திகளை பரப்புவோரையும் கண்காணித்து மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கிரண் ரிஜிஜூகூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் வடமாநிலங்களான ராஜஸ்தான்,உத்திரபிரதேசம், தெலுங்கானாஎன பல மாநிலங்களில் குழந்தைகளை கடத்துவதற்காக பலர் களம் இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அதை தொடர்ந்து பல வடமாநில நபர்கள் குழந்தையை கடந்த வந்தவர்கள் என பலர் கடும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த மாதம் மட்டும் 20 பேர் குழந்தை கடத்த வந்தவர்கள் என பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர்கிரண் ரிஜிஜூஇது தொடர்பாக அனைத்து மாநில அரசும் தன்னார்வ குழுக்களும்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும், திரிபுரா அரசும்சமூகத்தளங்களை கண்காணித்து வருகிறது.அதுமட்டுமின்றி இது தொடர்பாக உண்மை செய்திகளை வெளியிட ஒரு ட்விட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் உபிஅரசு தரப்பில் இதுபோன்ற குழந்தை கடத்தல் வதந்திகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கைக்குமுழுவீச்சில் உள்ளோம் என மாநில போலீஸ் டிஜிபி ஓ.பி .சிங் தெரிவித்துள்ளார்.

அதேபோல் குழந்தை கடத்தல் பற்றி போலியான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன்கூறியுள்ளார். குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த நபர்மீது சந்தேகம் ஏற்பட்டாலும்போலீசாரை தொடர்புகொள்ளவேண்டுமே தவிர சட்டத்தை கையில் எடுத்து கொண்டுஅவர்களை தாக்கக்கூடாது என கூறியுள்ளார்.

Child Care childkidnap Fake News
இதையும் படியுங்கள்
Subscribe