
இந்தியாவெங்கும் ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குஜராத், பீகார், மேற்கு வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் அதிகளவில் குழந்தைகள் திருமணம் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அறிவியலும் நாகரிக வளர்ச்சியும் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டுவந்தாலும், பிற்போக்கான கருத்துகளை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
சரியான வயதில் செய்யப்படும் திருமணம், சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்கும் அவர்கள் மூலம் உலகுக்கு வரும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, மறைமுகமாக மக்கள் தொகை அதிகரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் வறுமைக்கும் காரணமாகிறது.
இந்தியாவில் ஆண்களுக்குச் சட்டப்பூர்வமான திருமண வயதாக 21-ம், பெண்களுக்கு 18-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திருமண வயது எட்டுவதற்கு முன்பே பலரும் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும் இந்த ஆய்வில், ஆணின் திருமண வயதான 21-க்கு முன்பு நடக்கும் திருமணங்கள் குறைவுதான் என்றும், பெண்ணின் திருமண வயதுக்கு முன்பே நடக்கும் திருமணங்களே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. பீகார், மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் 40 சதவிகிதம் பெண்கள் திருமண வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் ஐந்தில் ஒரு பெண் திருமண வயதை எட்டும் முன் திருமணம் செய்துவைக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)