Advertisment

22,552 பெண்கள் 19 வயதிற்குள் தாயாகின்றனர்... அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்...

கேரளாவில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி குழந்தைப்பெற்ற 22,552 பெண்கள் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் என தெரியவந்துள்ளது.

Advertisment

child marriage

கேரள அரசின் மாநில பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்ட இந்த புள்ளிவிபரத்தில் 2017ம் ஆண்டின் படி கேரளாவில் பிறப்பு விகிதத்தில் 4.48% குழந்தைகளுக்கு 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அம்மாவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை விடவும் நகரங்களில் தான் 19 வயதுக்குட்பட்ட தாய்மார்கள் அதிகம் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதன்படி நகரத்தில் 16639 பெண்களும், கிராமத்தில் 5913 பெண்களும் 19 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

அதுபோல கிராமப்புறங்களில் உள்ள 19 வயதுக்குட்பட்ட 137 பெண்கள் இரண்டு குழந்தையையும், 48 பெண்கள் 3 குழந்தைகளையும், 37 பெண்கள் 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள அரசு, ''இந்த புள்ளிவிவரம், குழந்தை திருமணம் இன்னமும் நடந்து வருவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக தெரிகிறது. இந்த புள்ளிவிவரம் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்.

children Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe