யூ டியூப் பார்த்து பிரசவம்; பிறந்த குழந்தையை பெல்ட்டால் கொலை செய்த 15 வயது சிறுமி

Childbirth by watching YouTube; A 15-year-old girl k her newborn with a belt

யூ டியூப் பார்த்து பிரசவம் செய்து கொண்ட சிறுமி தனக்குபிறந்தகுழந்தையின் கழுத்தை பெல்ட்டால்நெறித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். தனது செல்போனில் இணையத்தில் அதிக நேரம் செலவிட்டு வந்த அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தாக்கூர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. இதனால் கருத்தரித்த சிறுமியின் வயிறு நாளைடைவில் பெரிதாகியுள்ளது. இதனைக் கண்ட அவரது தாய் இது குறித்து கேட்கையில் பொய் சொல்லி சமாளித்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த சிறுமி வீட்டில் யூடியூபில் பிரசவம் செய்வது குறித்தான வீடியோக்களைப் பார்த்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி வீட்டில் யூடியூப் பார்த்து தானாகவே பிரசவம் செய்துகொண்டுள்ளார்.குழந்தையைப் பெற்றெடுத்த பின் குழந்தை அழுதுள்ளது. குழந்தையின் சத்தத்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த சிறுமி பெல்ட்டால் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். குழந்தையின் உடலை வீட்டில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயார் வீட்டில் இரத்தக் கறைகள் இருந்ததைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து சிறுமியிடம் இது குறித்து கேட்டுள்ளார். மாதவிடாய் காரணமாக ஏற்பட்ட ரத்தக் கறைகள் எனச் சிறுமி கூறியுள்ளார். எனினும் சந்தேகம் தீராத தாய் சிறுமியிடம் தொடர்ந்து விசாரிக்க சிறுமி அழுது கொண்டே நடந்ததைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த தாய் இது குறித்து காவல்துறையில் புகார் செய்ய சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். குழந்தையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சிறுமியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Maharashtra police
இதையும் படியுங்கள்
Subscribe