Advertisment

மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

chief ministers discussion pm narendra modi

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மே- 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார். மேலும் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்து வருகிறார். பிரதமருடனான ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்று முதல்வர்களுடன் பேசி வருகிறார்.

பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே கரோனா தடுப்பு பணிகள் பற்றி தமிழகத்தில் இரண்டு நாளாக ஆய்வு செய்த மத்திய குழு இன்று மதியம் 12.30 மணிக்கு முதல்வரை சந்தித்து ஆலோசிக்கிறது.

chief ministers coronavirus meetings PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Subscribe