Advertisment

கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்; வீடியோ வைரல்!

Chief Minister who played cricket; The video went viral!

Advertisment

புதுச்சேரி - ஆரோவில் பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில் பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானத்துக்கான திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார். அவரும் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள் நலமுடன் இருப்பதற்குப் பூஜை செய்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைவருக்கும் நெற்றியில் விபூதி பூசி ஆசிர்வதித்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

cricket Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe