மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும்கூட்டணியில் இருந்து48 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்ஏக்நாத்ஷிண்டேதலைமையில் அசாமில் முகாமிட்டுள்ளனர். இதனால்சிவசேனாதலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ்அகாதிஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (23/06/2022) மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியசிவசேனாஎம்.பி.சஞ்சய்ராவத், "ஆளும்கூட்டணியில் இருந்துதங்கள் கட்சி விலகவும் தயார்; ஆனால் அசாமில் உள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள்,உத்தவ்தாக்கரேவைநேரில் சந்தித்துப் பேச வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தஏக்நாத்ஷிண்டேவைநேரில் சந்தித்தசிவசேனாகட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமாசெய்யத்தயார்எனக்கூறியிருந்த முதலமைச்சர்உத்தவ்தாக்கரே, 'வர்ஷா'என்றழைக்கப்படும்முதலமைச்சரின் அரசு இல்லத்தைக் காலி செய்து தனது சொந்தஇல்லத்திற்குசென்றார். இதனால்கூட்டணிகட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.