Advertisment

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் ரங்கசாமி! 

Chief Minister Rangasamy returns home from Corona

புதுச்சேரி முதலமைச்சராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 9-ஆம் தேதி அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சிகிச்சைகள் முழுவதும் முடிந்து இன்று மதியம் வீடு திரும்பினார். சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த ரங்கசாமிக்கு சுங்கச்சாவடி பகுதியில் வந்த போது தொண்டர்கள் சூரைத் தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். அதே சமயம் மேலும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், தொடர்ந்து சில மாத்திரைகளை உட்கொள்ளவும் அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisment

cm rangasamy Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe