Chief Minister Rangasamy inaugurated the 26th National Book Fair in Puducherry

Advertisment

புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26வது தேசிய புத்தகக் கண்காட்சி புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றித்தொடங்கி வைத்தார் . 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின்அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 25-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சி காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். பார்வையாளர்களுக்கு கவிதை போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி ஆகியவைநடத்தப்பட்டு தினமும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. திறப்பு விழாவில் பேராசிரியர் பாஞ்ச்.ராமலிங்கம், புதுவை தமிழ்ச் சங்கத்தலைவர் முத்து மற்றும் தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கண்காட்சி அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.