nitish

பாட்னா முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அவரது ஐக்கிய ஜனதா தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், முதலமைச்சர் நிதிஷின் மீது ஒரு செருப்பு வீசியுள்ளார். ஆனால், வீசப்பட்ட செருப்பு நிதிஷ் குமார் மீது படவில்லை.

Advertisment

இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தார்கள். இளைஞரையும் செருப்பால் தாக்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் இளைஞரை அங்கிருந்து இழுத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

பாரபட்சமான இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதலமைச்சரின் மீது செருப்பு வீசியதாக அந்த இளைஞர் கூரியதாக கூறப்படுகிறது.