Advertisment

''முதல்வர் நாராயணசாமி தப்பவே முடியாது'' - நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் பேட்டி!

'' Chief Minister Narayanasamy cannot escape '' - Nominated MLA Saminathan interview!

Advertisment

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்துள்ள உத்தரவு கடிதத்தில், ''எதிர்க்கட்சியில், 7 என்.ஆர்.காங்கிரஸ், 4 அதிமுக, 3 பாஜக என்ற எண்ணிக்கைகளில் உறுப்பினர்கள் உள்ளனர். வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துசட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

புதுச்சேரி அரசு கொறடா, நியமன எம்.எல்.ஏக்கள் மூன்றுபேரை பாஜக எம்.எல்.ஏக்கள் எனஆளுநர் தமிழிசைகுறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளதாவது, ''3 நியமன எம்.எல்.ஏக்களைக் கட்சிரீதியிலான எம்.எல்.ஏக்கள் எனஎடுத்துக்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களைப் பாஜகவினர் எனசொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்கள் வாக்களிக்க உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறினாலும், அவர்களைப் பாஜகவினர் என ஆளுநர் குறிப்பிடுவது தவறு'' எனத்தெரிவித்துள்ளார்.

மேலும், நியமன எம்.எல்ஏக்களைக் கட்சி சார்பில் குறிப்பிட்டால்,அவர்களைத் தகுதி நீக்கம் செய்யவும் சட்டத்தில் வழிவகை உள்ளது எனவும் புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில்,“நியமனஎம்.எல்.ஏக்களும் வாக்களிப்போம்” என நியமன எம்.எல்.ஏசாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், ''நாராயணசாமி தப்ப முடியாது. நியமன எம்.எல்ஏக்களான நாங்களும் நிச்சயம் வாக்களிப்போம். புதுச்சேரி சட்டசபையில் நியமன எம்.எல்.ஏக்களான எங்களைப் பாஜகஉறுப்பினர்கள் என்றுதான் அழைத்தார்கள். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது மட்டும் கட்சியைக் கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

MLA Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe