டோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! 

Chief Minister M.K.Stal's congratulations to ms dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது 41வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மகேந்திர சிங் டோனி கேக் வெட்டினார். டோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எம்.எஸ்.டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய பின்னணியில் இருந்து வரும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe