மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் மத்தளம் இசைத்து மகிழ்ந்தார்.
கொல்கத்தாவில் நவராத்திரி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநவராத்திரி விழாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பங்கேற்று வழிப்பட்டார். பின்னர், அங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த மத்தளத்தை மம்தா இசைத்து மகிழ்ந்தார்.
இதையடுத்து, அமைச்சர் ஒருவரும், கொல்கத்தா மாநகராட்சி மேயரும் மத்தளம் இசைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.