ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று (17/08/2022) மாலை 04.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பின் போது, நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக் கொள்கை போன்றவற்றில் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் பிரதமரிடம் வழங்கினார். அதேபோல், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.