ADVERTISEMENT

விமானத்தில் கேரள முதலமைச்சருக்கு எதிராக முழக்கம்! 

03:44 PM Jun 14, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானத்தில் இருவர் முழக்கமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மாநில முதலமைச்சருக்குத் தொடர்பிருப்பதாக, ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கண்ணூரிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் முழக்கமிட்டனர். அவர்களை முதலமைச்சர் உடன் வந்த இடதுசாரி கூட்டணிக் கட்சித் தலைவர் ஜெயராஜன் தடுத்து நிறுத்திக் கீழே தள்ளினார்.

இதனிடையே, இருவரையும் பிடித்து விமான நிலையத்தில் விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT