இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர்.
நாளை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் இந்த குழுவினர் தமிழகத்தில் நடைபெற்றுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி முக்கிய ஆலோசனைகளையும் நடத்தவுள்ளனர்.
தேர்தல் முன்னேற்பாடுகளில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளனர். தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடக்க உள்ளது. மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு தேர்தல் ஆணையர் கேரளாவுக்கு செல்கிறார்.