Advertisment

மோடியின் தமிழ் கடிதத்திற்கு ப.சிதம்பரத்தின் பதிலடி... காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு...

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறி அனுப்பிய கடிதத்திற்கு ப.சிதம்பரம் ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

chidambarams answer to modis birthday wish letter

ப.சிதம்பரத்தின் பிறந்தநாளான செப்டம்பர் 16ஆம் தேதி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதில், “உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என தமிழில் வாழ்த்தியிருந்தார் மோடி.

பிரதமர் மோடி அனுப்பிய இந்த கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் தனது அடுத்த பதிவில், "பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே? தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

modi P chidambaram INX media
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe