சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் பட்டு தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆகம விதியை மீறி ஆயிரம் கால் மண்டபத்தில் தொழிலதிபர் இல்ல திருமணம் விழா நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, நிர்வாக தீட்சிதர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதில் சில தவறுகள் நடைபெற்றுள்ளன. பக்தர்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இனி வரும் காலங்களில் தவறுகள் நடைபெறாது என சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் உறுதி.