Advertisment

"என் பரிந்துரைக்கு பிரதமர் செவிசாய்ப்பார் என நம்புகிறேன்"... வரவேற்பை பெறும் ப.சிதம்பரத்தின் யோசனை...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

Advertisment

chidambaram request to modi on caa issue

இந்த சட்டம் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை எனவும், இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது எனவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், "குடியுரிமையை வழங்குவதற்காகவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என பிரதமர் கூறுகிறார். ஆனால், அச்சட்டம், தங்கள் குடியுரிமையை பறித்துவிடும் என மக்கள் பலர் நினைக்கின்றனர்.

கேள்விகள் கேட்க முடியாத அமைதியான மக்களிடம் மட்டுமே உயர்தளங்களில் இருந்து மோடி பேசுகிறார். நாங்கள் ஊடகங்களின் வாயிலாக பேசுகிறோம். ஊடகவியலாளர்களிடம் இருந்து கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், பிரதமர் விமர்சகர்களுடன் பேசுவதில்லை. அவருடன் பேசுவதற்கு விமர்சகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விமர்சகர்கள் 5 பேருடன் மோடி விவாதிக்க வேண்டும். அவர் பேசுவதைக் கேட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து மக்கள் முடிவெடுக்கட்டும். என் பரிந்துரைக்கு பிரதமர் செவிசாய்ப்பார் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.அவரது இந்த யோசனைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

caa p.chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe