ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்திற்கு 74 வயதாவதால், அவரை திகார் சிறைக்கு அனுப்ப கூடாது. அதற்குப்பதில் வீட்டு சிறையில் வேண்டுமானால் வைக்கலாம். அவருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது எனக் கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கைக்கு பின்னர் உத்தரவு பிறப்பித்து உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தை வரும் 5ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க ஆணையிட்டனர். ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அனுப்பப்படுவர் என சிலர் கூறிவந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ காவலில் தான் இருப்பார் என நீதிமன்ற உத்தரவால் உறுதியாகியுள்ளது.