ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ கைது செய்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chidambb.jpg)
இதனையடுத்து அவரது காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்று காலை 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது.
Follow Us