chidambaram about nirmala sitaraman speech in gst meeting

Advertisment

ஜிஎஸ்டி நிதிச்சுமையை மாநிலங்கள் மீது சுமத்துவது துரோகம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்" எனக் குறிப்பிட்டார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரது கருத்தில், "பெருந்தொற்று கடவுளின் செயல் என்றால் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் நிதியையும் பொருளாதாரத்தையும் மோசமாக கையாண்டதை எப்படி நாம் புரிந்து கொள்வது, அதாவது பெருந்தொற்றுக்கு முன்பே பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததற்கு என்ன விளக்கம்? கடவுளின் தூதரான நிதியமைச்சர் இந்த கேள்விக்கு பதிலளிப்பாரா? ஜிஎஸ்டியினால் மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் மாநிலங்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

Advertisment

இரண்டு தெரிவுகளில் முதலாவது, சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ளுமாறு கூறியது, அதாவது நிதிச்சுமை முழுதும் மாநிலங்களின் தலையிலேயே விழும். மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய இரண்டாவது ஆலோசனையில் ஆர்பிஐ மூலம் ஈடுகட்டிக் கொள்வது. இதுவும் வேறொரு பெயரில் சந்தையிலிருந்து கடன் வாங்குவதுதான். மீண்டும் ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும். இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை மிக நேரடியாக மீறுவதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.