சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலை இந்த நிதியாண்டில் மட்டும் 3,200 இரயில் பெட்டிகளை தயாரித்து உலகின் முதல் அதிக இரயில் பெட்டி தயாரித்த தொழிற்சாலையாக உள்ளது. இதில் இந்த பிப்ரவரி மாதம் மட்டும் 301 இரயில் பெட்டிகளை சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலை தயாரித்துள்ளது.

icf

Advertisment

அதே இந்த வருடம் சீனாவில் வெறும் 2,600 இரயில் பெட்டிகள்தான் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017 வருடம் சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் 1,976 இரயில் பெட்டிகள் தயாரித்திருந்ததாகவும், அதுவே இந்த வருடம் 40 சதவீதம் அதிகரித்து 3,200 இரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment