Advertisment

சென்னை நோக்கி வந்த ரயில் தடம்புரண்டு பெரும் விபத்து

Chennai bound train; Derailment and major accident

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில்பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் முதல் கட்டமாக ஆறு பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. 6782 262 286 என்ற அவசரகால கட்டுப்பாட்டு அறைஎண் வழங்கப்பட்டுள்ளது.

accident Train
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe