மகாராஷ்டிர மாநிலத்தின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
100 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த தொழிற்சாலையில் திடீரென காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. இதனால் தீப்பிடித்த நிலையில் அங்கிருந்த ரசாயன பொருட்கள் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்துள்ளது. தொழிற்சாலையை சுற்றிலும் கரும் புகை சூழ்ந்தது. தீயை அணைக்க சுற்று வட்டாரத்தில் இருந்து தீயணைக்கும் படைகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் பலியான நிலையில், மேலும் 58 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.