மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் அந்த பகுதி மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் இரண்டு பத்திரிக்கையாளர்கள் என 3 பேர் காயமடைந்தனர். அதிகாலையில் ஊருக்குள் நுழைந்த இந்த சிறுத்தை குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் சுற்றி வந்தது. இதனை பற்றிய தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்றனர். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தையை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.