Advertisment

இதுவரை சத்தீஸ்கர் தேர்தலில் 58.47% வாக்குகள் பதிவு...

”கடந்த வாரம் சத்தீஸ்கரில் 18 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதானை தொடர்ந்து மீதம் உள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் சத்தீஸ்கரில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த 72 தொகுதிகளில் அமாமோரா மற்றும் மோதி என்னும் இரண்டு தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடைவது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து நான்காவது முறையாக சத்தீஸ்கரில் ஆட்சி செய்ய கடுமையாக பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக. அதேபோல, இந்த மாநிலத்தில் பாஜகவின் தொடர் வெற்றியை இந்த தேர்தலுடன் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. கடந்த வாரம் நடந்த முதல் கட்ட தேர்தலில் 18 தொகுதிகளில் சுமார் 70% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில், 4 மணி நிலவரப்படி 58.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assembly election chattishghar
இதையும் படியுங்கள்
Subscribe