Published on 10/11/2018 | Edited on 10/11/2018

நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் இரண்டு கட்டங்களாக சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று அமித்ஷா சென்றிருந்தார். அப்போது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அந்த பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, “சத்தீஸ்கரில் மாவோயிசத்தை புரட்சி என சொல்பவர்கள் ஒரு போதும் ஆட்சி அமைக்கவோ, மக்களுக்கு சேவை செய்யவோ முடியாது. அவர்கள் சத்தீஸ்கர் இளைஞர்களை தவறாக வழிநடத்திக் கொண்டுள்ளனர். பாஜக நான்காவது முறையாக சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கும், மாநிலத்தின் வளர்ச்சியால் கடந்த 15 வருடமாக காங்கிரஸால் இங்கு ஆட்சி அமைக்கவே முடியவில்லை” என்றார்.